கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை : 10 பேரை கைது செய்த ஆந்திர போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2021, 11:08 am
Medicine Black Market - Updatenews360
Quick Share

ஆந்திரா : கரும்பூஞ்சை தொற்றை குணமாக்க பயன்படுத்தப்படும் மருந்தை கள்ள சந்தையில் விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கருப்பு பூஞ்சை எனும் வைரஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து கருப்பு பூஞ்சை நோயை தடுக்கும் மாத்திரைகள் மருந்துகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியது. ஆனால் ஒவ்வொரு நாளும் மருந்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

கரும்பூஞ்சை தொற்றை குணமாக பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளை சிலர் கள்ள சந்தையில் விற்பனை செய்யும் கும்பல் ஒன்று செயல்படுதல் பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதையறிந்த போலீசார் கரும்பூஞ்சை தொற்றை குணமாக்க பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகளை அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்த 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 50 மருந்து குப்பிகளில், மாத்திரைகள் கைப்பற்றினர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 260

0

0