10’ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்..! விவசாய நிலத்தை தோண்டியபோது கிடைத்த பொக்கிஷம்..!

31 October 2020, 10:20 am
10th_Century_Sun_Scripture_Found_In_Andhra-Agri_Field_UpdateNews360
Quick Share

ஆந்திராவில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், விவசாய வேலைக்களுக்காக தோண்டிய போது, 10’ஆம் நூற்றாண்டு கால சூரிய கடவுளின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ராயதுர்கம் பாரம்பரிய சங்கத்தின் இணைச் செயலாளர் ஜி.சிவக்குமார் கூறுகையில், “இந்த சிற்பம் மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் கும்மகட்டா மண்டலத்தின் கல்குடு கிராமத்தில் உள்ள ஒரு வயலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி நேற்று தனது வயலைத் தோண்டிக் கொண்டிருந்தபோது இரண்டு அடி உயர கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது” எனக் கூறினார்.

சிவக்குமார் அதை அறிந்து, வயலுக்குச் சென்று, புகைப்படங்களை எடுத்து, விஜயவாடா மற்றும் அமராவதி (சி.சி.வி.ஏ) கலாச்சார மையத்தின் வரலாற்றாசிரியரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எமானி சிவனகி ரெட்டிக்கு அனுப்பினார்.

ரெட்டி தனது ஆய்வுகளின் மூலம், வேதாவதி ஆற்றின் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிற்பம் இரு கைகளிலும் தாமரை கொண்ட சூரிய கடவுள் என்று கூறினார். இது நோலம்பா பல்லவர்களின் கட்டடக்கலை பாணியில் உள்ளது மற்றும் கி.பி 10’ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

வயலில் கல் சிற்பம் காணப்பட்டதால், நில உரிமையாளர் இந்த விஷயத்தை கிராம வருவாய் அலுவலர் ஹனுமந்த ராவிடம் முதலில் தெரிவித்தார்.

இதையடுத்து ஹனுமந்த ராவ் மூலம் விசயத்தை அறிந்த கும்மகட்டா மண்டல தாசில்தார் வெங்கடாசலபதி இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். உள்ளூர் போலீசாரும் அந்த இடத்தை பார்வையிட்டனர். இதற்கிடையிலாய் அருகிலுள்ள கோவிலைச் சேர்ந்த ஒரு பூசாரி சிலைக்கு பூஜை செய்தார்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிலையை அனந்தபூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்குமாறு சிவக்குமார் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Views: - 28

0

0