“சுத்தியலால்“ மகனை கொன்ற தந்தை.! உறைய வைத்த சிசிடிவி காட்சி.!! (வீடியோ)

14 August 2020, 7:01 pm
Andhra Father Kill Son- Updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினம் அருகே சொத்து தகராறில் பெற்ற மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி மண்டலம், சின்னமுஷிடிவாட சத்யநகரில் வசித்து வருபவர் போரிபதி வீரராஜு(வயது 72). இவர் வணிக கடற்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நிலையில் தனது மூன்று மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

வீரராஜு தனது மகன் ஜலராஜு (வயது 41), அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். சமீபத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்டது.தொடர்ந்து சொத்து தகராரில் அடிக்கடி வீரராஜும் – ஜலராஜும் சண்டையிட்டு வந்தனர்.

இந்நிலையில் ஜலராஜும் வீட்டின் வெளியில் வராண்டாவில் இருந்தபோது, ​​அவரது தந்தை வீரராஜு பின்னால் வந்து சுத்தியலால் ஆத்திரத்தில் தலையில் நான்கு முறை தாக்கினார். இந்த அதிக ரத்த கசிவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே ஜலராஜு சரிந்து விழுந்தார்.

அவரது உறவினர்கள் அவரை பெந்துர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் ஜலராஜு உயிரிழந்தார். வீரராஜு பெந்துர்த்தி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். கோபாலபட்டணம் இன்ஸ்பெக்டர் மல்லா அப்பராவ் மற்றும் பெந்துர்த்தி எஸ்.ஐ.க்கள் ஸ்ரீனு, ஹரிகிருஷ்ணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவரங்களை சேகரித்து ஜலராஜுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் கே.ஜி.எச். அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஜலராஜு மனைவி ஈஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் வீரராஜு மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 6

0

0