இதில் ஆந்திரா முதலிடம் பிடிக்கக் காரணம் சந்திரபாபு நாயுடு தான்..! உரிமை கொண்டாடும் தெலுங்கு தேசம் கட்சி..!

6 September 2020, 3:02 pm
Jagan_Naidu_UpdateNews360
Quick Share

மாநில வணிக சீர்திருத்த செயல் திட்டம்2019 தரவரிசையில் ஆந்திரா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட நிலையில், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) அதற்கான பெருமை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கே சேரும் என்று கூறியது.

ஆந்திராவின் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் செருகுரி குட்டும்ப ராவ், 2019’ஆம் ஆண்டில் முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியின் செயல்திறன் குறித்த முன்னேற்ற அறிக்கை தான் மாநிலத்திற்கு முதலிடம் கிடைத்தது எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சியின் செயல்திறன் குறிகாட்டிகளை மத்திய அரசு கருத்தில் கொண்டதால், ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தால் சமீபத்திய தரவரிசையை சொந்தம் கொண்டாட முடியாது என்று குட்டும்ப ராவ் வலியுறுத்தினார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய குட்டும்ப ராவ், “நாயுடு ஆட்சி கொண்டு வந்த சீர்திருத்தங்கள் மூலம் 2019’ஆம் ஆண்டில் ஆந்திரா முதலிடத்தையும், தெலுங்கானா இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

ஒப்பந்தங்கள் மற்றும் சீர்திருத்தங்களை அமல்படுத்துதல், வணிகங்களைத் தொடங்குவது, தொழிலாளர் சீர்திருத்தங்கள் போன்றவற்றில் நாயுடு ஆட்சியின் போது தொடங்கப்பட்ட சீர்திருத்தங்களால் இது சாத்தியமானது” என்று கூறினார்.

முந்தைய தெலுங்கு தேச அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சீர்திருத்தங்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கம் முந்தைய ஆட்சியின் முன்முயற்சிகளை நிராகரித்தது என அவர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசை விமர்சிக்கவும் தவறவில்லை.

“பிபிஏக்களை ரத்து செய்வது போன்ற தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் கருதப்பட்டால், ஆந்திராவின் தரவரிசை மிகவும் கீழே விழும். ஆளும் கட்சியின் கொள்கைகளின் ஒரு வகையான நிச்சயமற்ற தன்மை மற்றும் கணிக்க முடியாத தன்மை தெலுங்கு தேச ஆட்சியின் போது, ஆந்திராவிற்கு கிடைத்த நல்லெண்ணத்தை உலுக்கியுள்ளன.” என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0