ஒயின் விற்பனைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் : தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அன்னா ஹசாரே அறிவிப்பு!!!

Author: kavin kumar
13 February 2022, 7:18 pm
Quick Share

மகாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனைக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை அன்னா ஹசாரே வாபஸ் பெற்றார்.

மகாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஒயின் விற்பனைக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை அன்னா ஹசாரே இன்று வாபஸ் பெற்றார். அவரது சொந்த கிராமமான ராலேகான் சிந்தியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசிய அன்னா ஹசாரே, குடிமக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகளுக்காக அமைச்சரவையின் முடிவை இப்போது மாநில அரசு முன் வைக்க முடிவு செய்துள்ளது. அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அரசாங்கத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும் என கிராம மக்களிடம் கூறினேன். இதனால் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

Views: - 453

0

0