நாளை டோக்கன் என அறிவித்துவிட்டு நேற்றே விற்பனை : திருப்பதியில் பக்தர்கள் திடீர் சாலைமறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 10:37 am
Free Token -Updatenews360
Quick Share

ஆந்திரா : இலவச தரிசனத்திற்காக திருப்பதிக்கு டோக்கன் வாங்க வந்திருந்த பக்தர்கள் திடீர் தர்ணா மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நிலை நாளை வரை திருப்பதியில் உள்ள சீனிவாசம் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டரில் நேற்றே டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டன.

எனவே அந்த கவுண்டரை தேவஸ்தானம் மூடி உள்ளது. இந்த நிலையில் இன்றும் இலவச தரிசன டோக்கன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சீனிவாசம் வளாகத்திலுள்ள இலவச தரிசன டோக்கன் கவுன்டரில் குவிந்தனர்.

கவுன்டர் மூடப்பட்டிருந்த நிலையில் இனிமேல் இங்கு இலவச தரிசனம் வழங்கப்படாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். இதனால் ஆவேசம் அடைந்த பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனிவாசம் கட்டிடம் எதிரில் இருக்கும் சாலையில் அமர்ந்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பக்தர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தி இரண்டு பேரை மட்டும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Views: - 132

0

0