இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி…!!

2 March 2021, 8:37 am
supreme court vaccine - updatenews360
Quick Share

புதுடெல்லி: இன்று முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அதைத்தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும், தொடர்ந்து போலீசாருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிலையில் 60 வயது மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து நேற்று இந்தியா முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவங்குகின்றன. இதற்கான தடுப்பூசி மையம், உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரில் தகுதி உள்ளோர், தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், தடுப்பூசிகளை இன்று முதல் போட்டுக் கொள்ளலாம் என பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Views: - 1

0

0