மீண்டும் விமானம் விபத்து… பயிற்சி விமானிகள் மாயம் : மீட்பு பணி தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 8:58 pm
Plane Crash - Updatenews360
Quick Share

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் இரண்டு பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

பாலாகாட் மாவட்டத்திலிருந்து 40 கி.மீ தொலைவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள லாஞ்சி மற்றும் கிர்னாபூர் பகுதிகளின் மலைகளில் எரிந்த நிலையில் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போன பெண் பயிற்சி விமானியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், உடலை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

Views: - 32

0

0