பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : 2 பேர் பலி!!

6 November 2020, 3:34 pm
Accident - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆம்பூர் அருகே சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மற்றொரு லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சி பகுதிக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற லாரி இன்று அதிகாலை ஆம்பூர் கன்னிகாபுரம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தது.

உடனடியாக மாடுகளை ஏற்றிவந்த லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சாலையிலேயே லாரியிற்கு பழுது பார்த்துகொண்டிருந்த போது, சென்னையிலிருந்து பெல்காம் (ஹார்பர்) பகுதியிக்கு பார்சல் லோடு ஏற்றிச்சென்ற லாரி சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் எதிர்பாரா விதமாக மோதி விபத்துக்குள்ளானது,

இவ்விபத்தில் பார்சல் லோடு ஏற்றிச்சென்ற ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலையா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கோபால் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்

Views: - 12

0

0