கொரோனா தடுப்பூசி மையத்தை அடித்து நொறுக்கிய வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள்..! மருத்துவர்களும் அடித்து விரட்டல்..!

16 January 2021, 6:58 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

ஹரியானாவின் கைத்தாலில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க வேளாண் சட்ட எதிர்ப்பாளர்கள் சிலர் முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தடுப்பூசி மையத்தை சேதப்படுத்தியதோடு, மருத்துவர்களையும் விரட்ட முயன்றனர். பின்னர் காவல்துறை தலையிட்ட பிறகு தான் நிலைமை சீரடைந்தது.

இந்த சம்பவத்தால் ஹரியானாவின் கைத்தாலில் சிறிது நேரம் குழப்பம் நீடித்தது மற்றும் தடுப்பூசி மையம் சீர்குலைந்துள்ளது. மருத்துவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

முதலில் தடுப்பூசிகள் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், பின்னர் சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறினர். தடுப்பூசிகள் பாதுகாப்பாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விவசாய சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் சில சட்டவிரோத சக்திகள் புகுந்துள்ளதாக கூறப்படும் புகார்களை நிரூபிக்கும் வண்ணம் இது உள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப் முழுவதும் ஜியோ கோபுரங்களை அழிப்பது, பெண் நிருபர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்ட பல அநாகரீக செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளில் சிலர் குடியரசு தின அணிவகுப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதுபோன்ற அராஜகத்தை உருவாக்குவதில் புதிதாக உருவான உழவர் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் முக்கிய பங்கு வகித்துள்ளார் எனவும், ராகேஷ் டிக்கைட் போன்றவர்களும் இதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0