ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மன்சுக் ஹிரனின் பிரேத பரிசோதனை அறிக்கை..! மகாராஷ்டிராவை உலுக்கும் அடுத்த மர்மம்..!

6 March 2021, 3:07 pm
antilia_bomb_scare_updatenews360
Quick Share

தானே க்ரீக் சதுப்பு நிலங்களில் இருந்து மீட்கப்பட்ட தொழிலதிபர் மன்சுக் ஹிரனின் பிரேத பரிசோதனை இன்று அதிகாலை இங்கு நிறைவடைந்தது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை, நான்கு உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவக் குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்து ஆகியவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அவரது உள்ளுறுப்பு தடயவியல் பகுப்பாய்விற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ் அம்புரே தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 25’ஆம் தேதி தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவுக்கு வெளியே 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஒரு அச்சுறுத்தல் கடிதத்துடன் மீட்கப்பட்ட எஸ்யூவி ஸ்கார்பியோ காரின் உண்மையான உரிமையாளரான ஹிரன் சமீபத்தில்வழக்கை விசாரித்து வரும் மகாராஷ்டிரா போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது மூலம் அவர் குறித்த தகவல் வெளியாகியது.

இந்நிலையில் ஹிரன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவர் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் கூறுகிறது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸ் பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகளை ரகசியமாக வைத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஹிரன் விவகாரத்தில் மகாராஷ்டிரா காவல்துறை சரியாக செயல்படவில்லை என்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையிலும் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது என்றும் புகார்கள் வந்ததால், இந்த வழக்கு மாநில பயங்கரவாத தடுப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான பாஜக, சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. அதே நேரத்தில் மனைவி விமலா உட்பட அவரது குடும்பத்தினர், நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார் என்ற கோட்பாட்டை நிராகரித்துள்ளனர். அவர்கள் ஹிரன் ஒரு சிறந்த நீச்சல் வீரர் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் சுஷாந்த் சிங் ராஜ்புத் போல் இதுவும் மிகப்பெரிய மர்மங்களைக் கொண்ட ஒரு வழக்காக இருக்குமோ எனும் ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.

Views: - 18

1

0