மன்சுக் ஹிரெனின் மரண வழக்கும் என்ஐஏவுக்கு மாற்றம்..! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு..!

Author: Sekar
20 March 2021, 7:34 pm
antilia_bomb_scare_updatenews360
Quick Share

முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் வெடிபொருள் நிரம்பிய கார் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மன்சுக் ஹிரனின் மரண வழக்கையும், மகாராஷ்டிரா சிறப்பு தீவிரவாத எதிர்ப்புப் படையிடம் இருந்து, தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரென், தானேவில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். மார்ச் 5’ஆம் தேதி காலையில் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றோடையில் இருந்து அவரது உடல் வெளியேற்றப்பட்டது.

மார்ச் 7’ஆம் தேதி, மகாராஷ்டிரா ஏடிஎஸ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தது.

தானேவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரியான மன்சுக் ஹிரென், மார்ச் 2’ம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் தானே மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர்களுக்கு கடிதம் எழுதியதாகக் கூறி, அவர் காவல்துறை மற்றும் ஊடகங்களால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார். 

அம்பானியின் வீட்டிற்கு வெளியே வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவராக இருந்தபோதிலும், அவர் குற்றம் சாட்டப்பட்டவரைப் போலவே நடத்தப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரி 25’ஆம் தேதி ஸ்கார்பியோ கார் 20 ஜெலட்டின் குச்சிகளைக் கொண்டு அன்டிலியா அருகே கண்டுபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 18 அன்று ஏரோலி-முலுண்ட் பாலத்திலிருந்து வாகனம் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எஸ்யூவி வழக்கை ஏற்கனவே விசாரிக்கும் என்ஐஏ தற்போது மன்சுக் ஹிரெனின் மரண வழக்கையும் கையில் எடுத்துள்ளது.

இதனால் இந்த வழக்கில் மேலும் பல புதிய திருப்பங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 180

0

0