கிருமி நாசினி தெளிக்கும் பேட்டரி ஆட்டோக்கள் : திருப்பதி கோவிலுக்கு காணிக்கை அளித்த தமிழக பக்தர் !!

1 November 2020, 12:27 pm
sanitizer Auto - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வேலூரைச் சேர்ந்த ஒரு பக்தர் 15 லட்சம் மதிப்பிலான கிருமிநாசினி தெளிக்கும் 5 பேட்டரி ஆட்டோக்களை காணிக்கையாக வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையப்ப சுவாமிக்கு காணிக்கையாக பணம், நகை, ரத்தின கற்கள் என பல்வேறு வகையான நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.
இதேபோல் சில பக்தர்கள் தாங்கள் தயாரிக்கும் முதல் வாகனத்தை காணிக்கையாக அளிப்பதும் உண்டு. அதேபோல் இன்று வேலூரைச் சேர்ந்த பேட்டரி தொழிற்சாலை நடத்தி வரும் ஒருவர் கிருமி நாசினி தெளிக்கும் பேட்டரி ஆட்டோக்களை நன்கொடையாக வழங்கினார்.

15 லட்சம் மதிப்பிலான 5 ஆட்டோக்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது. இதன் மூலம் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிருமிநாசினி தெளிக்கும் வகையில் உதவியாக இருக்கும் என அந்த பக்தர் தெரிவித்துள்ளார். இதனை கோவில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

Views: - 25

0

0