கேரளாவை அச்சுறுத்தும் கனமழை: சபரிமலைக்கு வருவதை தவிருங்கள்…பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்..!!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 2:36 pm
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் அடுத்த 2 நாட்களுக்கு வருவதைத் தவிர்க்கவும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கேரளாவின் தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றம் உருவாகியதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

கேரளாவின் பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு,மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருவதால், பம்பா நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பா நதி நீரி செல்லும் மணியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, பம்பா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பா நதியில் அபாயக் கட்டத்தைதாண்டி நீர் செல்வதால் சபரிமலைக்கு பக்தர்கள் இன்றும், நாளையும் வருவதைத் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்பின் 21ம் தேதிவரை பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம்செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பக்தர்கள் ஆன்-லைன் முன்பதிவு மூலமே, முறையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் தான் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும், ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டு வர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 237

0

0