‘நிவர்’ புயல் மீட்பு பணி: தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம்…!!

24 November 2020, 8:27 am
nivar rescue - updatenews360
Quick Share

புதுடெல்லி: நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை கரையை கடக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே புயல் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையில் இருந்து 30 குழுவினர் இந்த மாநிலங்களுக்கு வருகை தர உள்ளனர்.

nivar - updatenews360

ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 45 வரையான வீரர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 குழுக்கள் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிறுத்தப்படுவார்கள். 18 குழுக்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பார்கள். இந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

முறிந்து விழும் மரங்களை அகற்றுவதற்கு நவீன ஆயுதங்கள், அடிப்படை மருந்துகள் மற்றும் உபகரணங்களும் இந்த படையினரிடம் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 13

0

0