ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்: பல்கலை., வரலாற்றில் இடம்பிடித்த தமிழ்ப்பெண்..!!

Author: Rajesh
7 February 2022, 5:30 pm
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக முதல்முறையாக சாந்திஸ்ரீ பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு (JNU) சாந்திஸ்ரீ பண்டிட் என்பவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

latest tamil news

சாந்திஸ்ரீ பண்டிட் ஏற்கனவே புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழக்கத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவர் ஜே.என்.யு பல்கலையின் முன்னாள் மாணவர் ஆவார்.

ஜே.என்.யு., பல்கலைக்கழகத்தில் சாந்திஸ்ரீ எம்.பில் மற்றும் பி.எச்டி படித்துள்ளார். 1988ல் கோவா பல்கலையில் தனது ஆசிரியர் பணியை துவக்கிய சாந்திஸ்ரீ, 1993ல் புனே பல்கலைக்கு மாறினார். அவர் பல்வேறு கல்வி அமைப்புகளில் நிர்வாக பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 478

0

0