துனிஷியா நாட்டின் இந்திய தூதருக்கு கூடுதல் பொறுப்பு: லிபியாவுக்கான தூதராக நியமனம்..!!

Author: Aarthi Sivakumar
14 October 2021, 2:17 pm
Quick Share

புதுடெல்லி: லிபியாவுக்கான புதிய இந்திய தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

லிபியாவுக்கான புதிய இந்திய தூதரை வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. குல்காம் ஜாத்தோம் கேங்க்டே லிபியாவுக்கான அடுத்த இந்திய தூதராக அங்கீகாரம் பெற்றார். அவர் தற்போது துனிஷியா நாட்டின் தூதராக உள்ளார்.

லிபியாவின் அண்டை நாடாக துனிஷியா அமைந்துள்ளது. இந்நிலையில், ஒரே நேரம் இரண்டு நாடுகளுக்குமான தூதராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கேங்க்டே 1994ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக பொறுப்பேற்றார்.

விரைவில் அவர் இந்த பொறுப்பை ஏற்க உள்ளார். ஆப்பிரிக்கா கண்டத்தின் வடக்கு பகுதியில் துனிஷியா அமைந்துள்ளது. அவர் துனிஷியா நாட்டின் தலைநகரான துனிஸ் நகரத்தில் இருந்து கொண்டே இந்த பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 182

0

0