ஆன்லைன்ல ஆர்டர் செய்பவரா நீங்கள்? உங்களை குறி வைக்க காத்திருக்கும் மோசடி கும்பல்!!

20 April 2021, 4:49 pm
Online Frauds 1 -Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு விழுந்ததாக கூறி மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் மஞ்சூரியாலாவை சேர்ந்த நவீன் கடந்த மாதம் நான்காம் தேதி தனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும் நீங்கள் ஆன்லைனில் வாங்கிய பொருட்களுக்கு பரிசு வந்திருப்பதாகவும் கூறி, அவரது வங்கி கணக்கில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை திருடப்பட்டு விட்டதாக வாரங்கள் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்த விசாரனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களுடன் இந்த கும்பலை பற்றிய தகவல் வெளியானது.

இந்த கும்பல் 2014 ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு தெலுங்கானா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவர்களிடம் இந்த கும்பல் கைவரிசை காட்டியது போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முகவரி கொடுத்த தாமோதர நாயுடு என்ற நபரை விசாரித்த காவல்துறை இந்த கும்பலுக்கு கடந்த ஆறு வருடங்களாக வாடிக்கையாளர்களின் முகவரியை கொடுத்ததாக தெரியவந்தது. ஒருவரின் விவரங்களை தெரிவித்தால் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை அந்த கும்பல் இவர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தற்போது அந்த கும்பலிடமிருந்து 14 லட்சத்து 30,000 ரூபாய் பணம் மற்றும் 15 செல்போன் மற்றும் கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்ததாக வரங்கள் காவல்துறை ஆணையர் தருண் ஜோஷி தெரிவித்தார்.

Views: - 89

0

0