காஷ்மீரில் பலத்த ராணுவ பாதுகாப்பு: ராணுவ தளபதி நரவானே நேரில் ஆய்வு..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 10:32 am
Quick Share

புதுடெல்லி: காஷ்மீரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ராணுவ தளபதி நரவானே 2 நாள் பயணமாக செல்கிறார்.

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கூட வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Army chief begins 2-day visit to Valley - Hindustan Times


பயங்கரவாதிகளின் இத்தகைய செயலால் காஷ்மீரில் பணிபுரியும் வெளிமாநிலத்தினர் கடும் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே காஷ்மீரில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய தலைமை ராணுவ தளபதி நரவானே 2 நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார். இந்த தகவல் ராணுவ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 259

0

0