கேரளாவின் இரு அரசு பள்ளிகளில் 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா..!
8 February 2021, 7:38 pmமலப்புரத்தில் உள்ள இரு அரசுப்பள்ளிகளில் பயிலும் 190 அரசு மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சுகாதார அதிகாரிகள் மாவட்டத்தில் பள்ளி அதிகாரிகளிடம் கூடுதல் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டதோடு கொரோனா நெறிமுறையை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், மரஞ்சேரி மேல்நிலைப்பள்ளியின் 150 மாணவர்கள் மற்றும் 34 ஆசிரியர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
“கடந்த வாரம் பிற்பகுதியில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளியின் 600’க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நேர்மறை சோதனை செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் முதலில் நேர்மறை சோதனை செய்த மாணவரின் வகுப்பு தோழர்கர்கள்” என்று அந்த அதிகாரி கூறினார்.
இதே போல் மலப்புரத்தின் பொன்னானியில் உள்ள வன்னேரி மேல்நிலைப் பள்ளியின் 39 மாணவர்களுக்கும் 36 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முககவசங்களின் பயன்பாடு மற்றும் மாணவர்களின் வெப்ப பரிசோதனையை கண்டிப்பாக தினசரி சோதிக்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகள் பள்ளி அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
நேர்மறையை பரிசோதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி முழுவதும் கிருமிநாசினி செய்வதற்காக இரு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0
0