கங்கனா ரனவத்தை மிரட்டிய சிவ சேனா எம்எல்ஏ..! களத்தில் இறங்கிய தேசிய பெண்கள் ஆணையம்..! கைது செய்ய வலியுறுத்தல்..!

5 September 2020, 10:48 am
rekha_sharma_NCW_Cheif_UpdateNews360
Quick Share

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்துக்கு மிரட்டல் விடுத்ததாக சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் என்பவரை தேசிய பெண்கள் ஆணையத்தின் (என்.சி.டபிள்யூ) தலைவர் ரேகா சர்மா கைது செய்ய வலியுறுத்தியுள்ளார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டதற்காக கங்கனா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சர்நாயக் ஒரு ட்வீட்டில் கோரியுள்ளார்.

“எம்பி சஞ்சய் ராவத் கங்கனாவை மிகவும் லேசான முறையில் எச்சரித்தார். அவர் இங்கு வந்தால் எங்கள் துணிச்சலான பெண்கள் அவரை அறையாமல் அனுப்ப மாட்டார்கள். தொழிலதிபர்களையும் திரைப்பட நட்சத்திரங்களையும் உருவாக்கும் நகரமான மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிடுவதற்காக தேசத் துரோக வழக்கை கங்கனா மீது வழக்கு பதிவு செய்யுமாறு நான் கோருவேன்.” என சர்நாயக் மராத்தியில் ட்வீட் செய்துள்ளார்.

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தன்னை அச்சுறுத்தியதாக கங்கனா ரனவத் குற்றம் சாட்டியதை அடுத்து சர்நாயக்கின் கருத்துக்கள் வந்துள்ளன.

சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக், ரனவத்தை அச்சுறுத்தியதாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு, சர்மா இந்த விவகாரத்தை சூ மோட்டோ வழக்காக எடுப்பதாக அறிவித்துள்ளார்.

“சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் ஒரு நேர்காணலில் கங்கனாவை மிரட்டினார். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.” என மும்பை காவல்துறையைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அவர் மேலும், இதை தான் சூ மோட்டோ வழக்காக எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மகாராஷ்டிரா டிஜிபி எஸ் கே ஜெய்ஸ்வாலுக்கு எழுதிய கடிதத்தில், “பொறுப்பான பதவிகளை வகிக்கும் நபர்களால் ஒரு பெண்ணுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கொடுக்கப்பட்ட வெறுப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆணையம் தீவிரமாக கவனித்துள்ளது.

நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆணையம் கவலைப்படுவதால், மேற்கூறிய விஷயத்தில் பிரதாப் சர்நாயக்கிற்கு எதிராக சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.” என தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா மேலும் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0