ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், உண்டி தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ ரகுராம கிருஷ்ணம்ராஜூ புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் , சிஐடி டி.ஜிபி மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரகுராமகிருஷ்ணம் ராஜு சில மாதங்களில் பின்னர் ஜெகன் மோகனுடன் ஏற்பட்ட முரன்பாடான அனுகுமுறையால் அவரை விமர்சிக்க தொடங்கினார்.
அந்த நேரத்தில் அவரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து அடித்து துன்புறுத்தினர். பின்னர் தெலுங்கு தேச கட்சியில் இணைந்த ரகுராமகிருஷ்ண ராஜு உண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தன்னை பொய் வழக்கில் கைது செய்து அடித்து துன்புறுத்தி கொலை முயற்சி செய்ததாக குண்டூர் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து முன்னாள் சிஐடி டி.ஜி.பி. சுனில் குமார், உளவுத்துறை தலைவர் சீதாராமஞ்சநேயுலு, முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, அப்போதைய சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி விஜய் பால் ஆகியோர் மீது போலீஸ் காவலில் இருந்தபோது கொலை முயற்சிக்கு காரணமானதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குண்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாவதி தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்ததாக அவர் மீது புகார் அளித்ததால் அவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.