தங்க கடத்தல் வழக்கில் நீடிக்கும் மர்மம் : ஸ்வப்னா பெயரில் மேலும் ஒரு வங்கி கணக்கில் ரூ.38 கோடி டெபாசிட் எப்படி?

Author: Aarthi
1 October 2020, 6:29 pm
swapna - updatenews360
Quick Share

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவின் பெயரில் மேலும் ஒரு தனியார் வங்கி கணக்கில் ரூ.38 கோடி டெபாசிட் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா. ஸ்வப்னாவிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஸ்வப்னாவின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை மேற்கொண்ட போது அதில் கோடிக்கணக்கிலான பணமும், நகைகளும் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மற்றொரு தனியார் வங்கியில் ஸ்வப்னா பெயரில் ரூ.38 கோடி டெபாசிட் செய்திருப்பதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த வங்கியில் உள்ள ஸ்வப்னாவின் கணக்கிற்கு மேலும் சிலரிடம் இருந்து பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த தனியார் வங்கியில் தான் ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் கணக்கும் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் மேலாளருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 39

0

0