ஜம்முவில் தாக்குதல் நடத்த மிகப்பெரும் சதித் திட்டம்..! கைதான லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் வாக்குமூலம்..!
7 February 2021, 11:48 amஜம்முவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குளிர்கால தலைநகரைக் குறிவைக்க, லஷ்கர்-இ-முஸ்தபா தலைவர் ஹிதயதுல்லா மாலிக் மேற்கொண்ட ஒரு பெரிய சதியை வெளிப்படுத்தியதை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் தோல்வியடைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குளிர்கால தலைநகராக உள்ள ஜம்மு நகரில் பயங்கரவாதி ஹிதயதுல்லா மாலிக் ஒரு பெரிய தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக அனந்த்நாகில் இருந்து முன்னர் கைது செய்யப்பட்ட நான்கு பயங்கரவாத கூட்டாளிகள் வெளிப்படுத்தியிருந்தனர்.” என்று ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் ஜம்மு மற்றும் அனந்த்நாக் போலீசார் இணைந்து நடத்திய நடவடிக்கையில் ஜம்முவின் குஞ்ச்வானி அருகே லஷ்கர்-இ-முஸ்தபா தலைவர் மாலிக் கைது செய்யப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். லஷ்கர்-இ-முஸ்தபா என்பது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கிளை அமைப்பாக பார்க்கப்படுகிறது.
மே 2020’இல் புல்வாமாவில் சக்திவாய்ந்த கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரில் இவரும் ஒருவர் ஆவார்.
மாலிக் வசம் இருந்த இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டனர்.
கூட்டு நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்த காவல்துறையினர், பயங்கரவாதி போலீசாரைத் தாக்கி சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் போலீசார் திறமையாக செயல்பட்டு அவரைக் கைது செய்தது. மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சனாபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்ததாக துணை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சனாபோரா வட்டாரத்தில் சிஆர்பிஎப்பின் 29’வது பட்டாலியனின் சாலை திறப்பு நிகழ்வில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிஆர்பிஎஃப் மக்கள் தொடர்பு அதிகாரி திவாரி தெரிவித்தார். தாக்குதலின் போது கான்ஸ்டபிள் மனோஜ் குமார் யாதவ் காலில் காயம் ஏற்பட்டது என அவர் மேலும் கூறினார்.
காயமடைந்த கான்ஸ்டபிள் மருத்துவ உதவிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0
0