“முழு ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்” – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

16 August 2020, 11:07 am
Quick Share

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

இந்தநிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், நீண்ட நாள் முழு ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக கூறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதே போல், ஆம் ஆத்மி தொண்டர்கள், பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Views: - 30

0

0