டெல்லியில் கொரோனா தொற்று அடுத்த 10 நாட்களுக்குள் கட்டுக்குள் வரும்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை…!!

13 November 2020, 3:00 pm
Arvind_Kejriwal_UpdateNews360
Quick Share

டெல்லியில் அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையை தொட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் புதிதாக 7,332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தவர்களில் 104 பேர் பலியாகியுள்ளனர்.

டெல்லியில் கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை வீசுகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 6,462 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியதை அடுத்து, இதுவரை அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,16,580 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது எனக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று நம்புகிறேன். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது காற்று மாசு மிகப்பெரிய காரணம். காற்று மாசு அதிகரித்த பிறகே, டெல்லி தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது என தெரிவித்துள்ளார்.

Views: - 24

0

0