வேகமெடுக்கும் கொரோனாவால் மருத்துவமனை பற்றாக்குறை..! அமித் ஷாவின் உதவியை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

15 November 2020, 12:41 pm
Amit_Shah_Arvind_Kejriwal_UpdateNews360
Quick Share

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை நெருக்கடியை எதிர்கொள்வதால், மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் அப்போது முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் பிற மாநிலங்களின் ஒத்துழைப்பை உறுதி செய்வது உள்ளிட்ட கூடுதல் உதவிகளையும் கெஜ்ரிவால் அப்போது கோரக்கூடும்.

“மத்திய உள்துறை அமைச்சருடனான தனது சந்திப்பின் போது, ​​டெல்லியில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விவாதிக்கக்கூடும்” என்று டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீபாவளிக்கு ஒரு நாள் கழித்து, டெல்லி-என்.சி.ஆரில் காற்றின் தரம் கடும் மோசமடைந்துள்ளது. காற்றின் தரக் குறியீடு இன்று காலை 421’ஐ எட்டியது என காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை, கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் புதிய எழுச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று காற்று மாசுபாடு என்றும் இது குளிர்காலத்தில் அதிகரிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

வரவிருக்கும் வாரங்களில் ஒரு நாளைக்கு 15,000 புதிய கொரோனா பாதிப்புகள் வரை இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், டெல்லியில் உள்ள மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் படுக்கைத் திறனை அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

Views: - 23

0

0

1 thought on “வேகமெடுக்கும் கொரோனாவால் மருத்துவமனை பற்றாக்குறை..! அமித் ஷாவின் உதவியை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

Comments are closed.