வெறுப்புப் பிரச்சாரத்தால் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது..! ரிஹானாவின் டிவீட்டிற்கு அமித் ஷா பதிலடி..!

3 February 2021, 8:31 pm
Amit_Shah_UpdateNews360
Quick Share

மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர், சில சுயநலக் குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவைத் திரட்ட முயற்சித்தன என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்தவொரு வெறுப்புப் பிரச்சாரத்தாலும் இந்தியாவின் ஒற்றுமையைத் தடுக்க முடியாது என்றார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எந்தவொரு பிரச்சாரமும் இந்தியாவை புதிய உயரங்களை அடைவதிலிருந்து தடுக்க முடியாது! பிரச்சாரத்தால் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது. வளர்ச்சி மட்டுமே அதை தீர்மானிக்கும். வளர்ச்சியை அடைய இந்தியா ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் நிற்கிறது.” எனக் கூறியுள்ளார்.

விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து வெளிநாட்டு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டதை அடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமித் ஷா ஆகியோரிடமிருந்து இந்த அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாப் பாடகி ரிஹானா, ஸ்வீடிஷ் சமூக ஆர்வலர் கிரெட்டா டன்பெர்க் மற்றும் முன்னாள் ஆபாச நடிகை மியா கலீஃபா ஆகியோர் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.

முன்னதாக, பாஜக தலைவர் சி.டி.ரவி, “இடதுசாரிகள் உலகெங்கிலும் இருந்து எவரையும் வாங்க முடியும். ஆனால் உண்மை எப்போதும் வலதுபுறத்தில் இருக்கும்” என்று கூறி வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்களை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0