லவ்லினாவுக்காக 20 நிமிடம்: ஒலிம்பிக் போட்டியை காண அசாம் சட்டப்பேரவை ஒத்திவைப்பு..!!

Author: Aarthi
4 August 2021, 8:51 am
Quick Share

கவுகாத்தி: லவ்லினாவுக்காக அசாம் சட்டப்பேரவை 20 நிமிடம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாம் மாநிலம் லவ்லினா பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டியை பார்க்க அம்மாநில சட்டப்பேரவை 20 நிமிடம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லவ்லினா பங்கேற்கும் அரை இறுதிப்போட்டி இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

லவ்லினா வெற்றி பெற வேண்டி முதல்-மந்திரி விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்கிறார். பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் லவ்லினா போர்கோஹைன்-பூசெனஸ் சர்மினெலி எதிர்கொள்கிறார்.

Views: - 278

2

0