போன் மூலம் முத்தலாக் கொடுத்த அசாம் நபர்..! நான்கு மாத குழந்தையுடன் பரிதவிக்கும் மனைவி..! போலீஸ் வழக்குப்பதிவு..!
21 August 2020, 6:06 pmஅசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் தொலைபேசியில் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஸ்வநாத்தின் அடாபெட்டி பகுதியைச் சேர்ந்த அஜிசூர் ரஹ்மானை மணந்தார். அவர் இப்போது நான்கு மாத குழந்தைக்கு தாயாகவும் உள்ளார்.
அந்தப் பெண் தனது கணவர் மீது பிஸ்வநாத் சரியாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தனது கணவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தன்னை சித்திரவதை செய்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். அவர் நான்கு மாத கர்ப்பமாக இருந்தபோது தனது தாயின் வீட்டிற்கு திரும்பினார்.
“எனது கணவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் திருமணத்திற்குப் பிறகு என்னை சித்திரவதை செய்யத் தொடங்கினார்கள். நான் என் கணவரின் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டு என் தாயின் வீட்டிற்குத் திரும்பினேன். அந்த நேரத்தில் நான் நான்கு மாத கர்ப்பமாக இருந்தேன். சமீபத்தில், என் கணவர் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் முத்தலாக் கொடுத்தார்.” என பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
“நான் இப்போது என்ன செய்வேன்? எனது நான்கு மாத குழந்தையுடன் நான் எங்கே போவேன்? நான் நீதி வேண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.” என்று அந்தப் பெண் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1’ஆம் தேதி, மோடி அரசு முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) சட்டம், 2019’ஐ நிறைவேற்றியது. இதன் மூலம் உடனடியாக முத்தலாக் ஒரு கிரிமினல் குற்றமாக மாறும்.
ஆகஸ்ட் 22, 2017 அன்று, உச்சநீதிமன்றம் தலாக்-இ-பித்அத் அல்லது முத்தலாக் நடைமுறையை அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்தது.