அசாம் – மிசோரம் எல்லையில் பிரிவினைவாத கும்பல் தாக்குதல்: 6 போலீசார் உயிரிழப்பு….பலர் படுகாயம்..!!

Author: Aarthi
27 July 2021, 10:22 am
Quick Share

திஸ்பூர்: அசாம் – மிசோரம் எல்லையில் இன்று பிரிவினைவாத கும்பல் நடத்திய தாக்குதலில் அசாம் போலீசார் ஆறு பேர் உயிரிழந்தனர்.

அசாம் - மிசோரம் எல்லையில் தாக்குதல்: 6 போலீசார் பலி | Dinamalar

வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும் 164.6 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த இரு மாநிலங்களும் நில ஆக்கிரமிப்பு புகார்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. இரு மாநிலங்களுக்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் வடகிழக்கு மாநில முதலமைச்சர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். இந்நிலையில் அசாம், மிசோரம் எல்லை பகுதியில் நேற்று மீண்டும் பயங்கர வன்முறை வெடித்தது. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாத கும்பல், அசாம் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலி அரசு வாகனங்கள் சூறையாடப்பட்டன.

இந்த கொடூரமான தாக்குதலில் அசாம் போலீசார் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, மிசோரம் முதலமைச்சரும், மிசோ தேசிய முன்னணி தலைவருமான சோரம்தங்கா இருமாநில எல்லையில் நடந்த வன்முறை குறித்த ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண அமித் ஷாவிடம் வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டார். இதன்பின் அசாம் முதலமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஹிமாந்த பிஸ்வா சர்மா மற்றொரு வீடியோவை வெளியிட்டு மிசோரம் அரசு மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Views: - 164

0

0