அசாம் – மிசோரம் பிரச்சனைக்கு முடிவு?: இருதரப்பிலும் சமரசம்…அனைத்து வழக்குகளும் வாபஸ்..!!

By: S
3 August 2021, 6:03 pm
Quick Share

அய்சால்: அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் எல்லை மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 26ம் தேதி இரு மாநில போலீசாருக்கு இடையே துப்பாக்கி சூடு நடத்தது. இதில், அசாமை சேர்ந்த 6 போலீசார் உட்பட 7 பேர் பலியானார்கள். இரு மாநில எல்லையில் பதற்றத்தை தணிக்க ஒன்றிய பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளது.

updatenews360

இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு, இருமாநில முதலமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, மிசோரம் ஆளுநர் ஹரிபாபு நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஹரிபாபு, இரு மாநில எல்லை விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு ஒன்றிய அரசு முயற்சித்து வருகின்றது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கிறார். இரு மாநில முதலமைச்சர்களும் அமைதி திரும்பவுதற்கு ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளனர் என்றார். இதனால், பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டுள்ளதால், அசாம் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது மிசோரம் போலீசார் தொடர்ந்து வழக்குகளும், மிசோரம் எம்பி உள்ளிட்டோர் மீது அசாம் போலீசார் தொடர்ந்த வழக்குகளும் நேற்று வாபஸ் பெறப்பட்டன.

Views: - 261

0

0