அசாமை ஆட்டி படைக்கும் கனமழை, வெள்ளம்…! பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு
1 August 2020, 1:18 pmதிஸ்பூர்: அசாம் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 133 ஆக அதிகரித்துள்ளது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா தாக்கம் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் மழை,வெள்ளமும் அதனுடன் கை கோர்த்துள்ளது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பலத்த, மழை வெள்ளம் காரணமாக சேதம் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக அசாம் மாநிலத்தில் அதிக மழை பொழிவு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 130 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் பார்பேட்டா, கோக்ராஜர், கம்ரூப் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா ஒருவர் இப்போது மழை, வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ள பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.