திடகாத்திரமான துணை தேவை! வைரலாகும் 73 வயது பாட்டியின் வரன் விளம்பரம்!

1 April 2021, 8:30 am
Quick Share

மைசூரை சேர்ந்த 73 வயது பாட்டி ஒருவர், தனக்கு திடகாத்திரமான துணை வேண்டும் எனவும், சில கட்டுப்பாடுகளை விதித்தும் வரன் விளம்பரம் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த 73 வயது நிரம்பிய பாட்டி குறித்து தான் இப்போது சமூக வலைதளங்களில் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் இவர், மறுதிருமணம் குறித்து வரன் விளம்பரம் வெளியிட்டிருக்கிறார். அதில் தனக்கு திடகாத்திரமான மாப்பிள்ளை வேண்டும் எனவும், அவர் 73 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். மேலும் அவர் பிராமண வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என கூறியுடன், அப்படி யாராவது இருந்தால், தன்னை தொடர்பு கொள்ளும்படியும் விளம்பரம் செய்திருக்கிறார்.

தனது மறுமண அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் சோகமான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். தனக்கு 13 வயதில் திருமணம் முடிந்தததாகவும், ஆனால் மனம் ஒத்துப் போகாததால், விரைவில் விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார். அவர் நன்றாக படித்ததால், அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்திருக்கிறது. அதனால் தனது பெற்றோரை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டார்.

மேலும் சொந்த வீடு ஒன்றையும் வாங்கி இருக்கிறார். தனது வாழ்நாளை இப்படி அவர் கழித்து வந்த நிலையில், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். பின் அவர்களது பெற்றோர்களும் இறந்து விட்டனர். தற்போது தான் ஆசையாக வாங்கிய வீட்டில், தனியாக வசிப்பதால், அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. தனிமை வாட்டுவதால் தான், மறுமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். சமூக வலைதளத்தில் அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0

Leave a Reply