இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெறும் சவால்..! ஜி 20 மாநாட்டில் மோடி உரை..!

22 November 2020, 10:26 am
PM_Modi_UpdateNews360
Quick Share

கொரோனா தொற்றுநோய் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்றும் இது மனிதகுல வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, ஜி 20 உச்சி மாநாட்டில் உரையாற்றியபோது கூறினார்.

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் ஜி 20 உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கூட்டம் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் நடைபெற்றது. அடுத்த ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியா 2022’இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்குப் பிந்தைய உலகத்திற்கான ஒரு புதிய உலகளாவிய நடைமுறையை உருவாக்க மோடி பரிந்துரைத்தார். தொழில்நுட்பம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சென்றடைவதை உறுதி செய்தல், ஆட்சி முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் இயற்கையின் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஜி 20 புதிய உலகத்திற்கு அடித்தளம் அமைக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

“ஜி 20 தலைவர்களுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டேன். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் நிச்சயமாக இந்த தொற்றுநோயிலிருந்து விரைவாக மீட்க வழிவகுக்கும். வீடியோ கான்பெரன்ஸ் முறையில் உச்சிமாநாட்டை நடத்திய சவுதி அரேபியாவுக்கு நன்றி” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“நம் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை நம் சமூகங்களை கூட்டாகவும் நம்பிக்கையுடனும் போராட ஊக்குவிக்க உதவுகிறது. இயற்கையின் பாதுகாவலராக ஆரோக்கியமான மற்றும் முழுமையான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 22

0

0