மது கடத்தலை தடுத்து நிறுத்த முயன்ற எஸ்.ஐ மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி.!!

29 August 2020, 3:15 pm
Quick Share

தெலங்கானா: மது கடத்தலை தடுத்து நிறுத்த முயன்ற எஸ்.ஐ மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சொந்த ஊர் அருகே கடத்தல் கும்பல் அட்டூழியம். உயிர்தப்பிய எஸ்.ஐ ஜீப்பில் இரண்டு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று காரை மடக்கி பிடித்து டிரைவரை கைது செய்தார்.

கடப்பா மாவட்டம் புலிவெந்தலா அருகே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சொந்த ஊரான இடுப்பலபாவி உள்ளது. தெலங்கானாவில் இருந்து கார் ஒன்றில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக புலிவந்தலா எஸ்.ஐ கோபிநாத் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது.

எனவே எஸ்.ஐ கோபிநாத் ரெட்டி இடுப்பலபாவி அருகே முக்கிய சாலையில் மது கடத்தி வரும் காரை எதிர்பார்த்து இன்று காலை காத்திருந்தார். கார் அங்கு வந்த நிலையில் அதை தடுத்து நிறுத்த முயன்றார் எஸ்ஐ கோபிநாத் ரெட்டி.
அப்போது கார் டிரைவர் எஸ்.ஐ கோபிநாத் ரெட்டி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார்.

ஆனால் எஸ்.ஐ கோபிநாத் ரெட்டி தாவி குதித்து கொலை முயற்சியிலிருந்து தப்பினார். இந்த நிலையில் கார் டிரைவர் காரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார். உயிர் தப்பிய எஸ்.ஐ தன்னுடைய ஜீப்பில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று மதுபாட்டில்கள் கடத்தி வந்த காரை தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்து கார் டிரைவரை கைது செய்தார்.

காரில் இருந்த என்பது மது பாட்டில்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார் டிரைவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 0

0

0