ஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றி கொலை முயற்சி: விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் விபரீதம்..கன்னட அமைப்பின் நிர்வாகி கைது..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 4:45 pm
Quick Share

பெங்களூரு: குருகுண்டபால்யா என்ற பகுதியில் விவசாய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்த நாடு தழுவிய முழு அடைப்பு- பாரத் பந்த் போராட்டம் இன்று காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

Image

பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரில் உள்ள குருகுண்டபால்யா என்ற பகுதியில் இன்று கன்னட அமைப்பினர் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image

அங்கு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கன்னட அமைப்பைச் சேர்ந்த கிரிஷ் கவுடா அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி தர்மேந்திர குமார் மீனா மீது SUV காரை ஏற்றிச் சென்றார்.

இதனையடுத்த, அவரைப் பிடித்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும், காரை பறிமுதல் செய்தனர். ஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 171

0

0