பாபர் மசூதிக்கு பழிவாங்க இந்திய முஸ்லீம்களுக்கு அழைப்பு..! ஐஎஸ்ஐஎஸ் அடாவடி..!

20 October 2020, 5:31 pm
ISIS_Terrorists_UpdateNews360
Quick Share

பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் தனது பத்திரிகையின் சமீபத்திய பதிப்பில் பாபர் மசூதி இடிப்பிற்கு பழிவாங்க ஆயுதங்களை எடுக்குமாறு முஸ்லீம்களை வலியுறுத்தும் உள்ளடக்கத்தை கொண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளது.

மேலும் பாபர் மசூதி சம்பவத்திற்கு பழிவாங்க இந்திய அரசுக்கு எதிராக பழிவாங்க முஸ்லீம்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஜிகாத் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கட்டுரைகள் உத்தரபிரதேச மருத்துவர் கபீல் கானை இஸ்லாமியோபொபியா பற்றிய தவறான கட்டுக்கதைகளை கூறுவதற்கு மேற்கோளிட்டுள்ளது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம்களைத் தூண்டுவதற்காக பொய்ப் பிரச்சாரங்களை பரப்பவும் முயற்சிக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தொகுதி தென்னிந்தியாவின் காடுகளுக்குள் தனது பிரிவுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.

ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, தென்னிந்தியாவில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஒரு பிரிவான அல் ஹிந்த் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். டைஷ்விலாயா (மாகாணம்) நிறுவ 2019’இல் சதி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக பெங்களூரு மற்றும் கடலூரைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சதி செய்து பயங்கரவாத அமைப்பை நிறுவியதற்காக 17 சதிகாரர்களுக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இரண்டு முக்கிய சதிகாரர்கள் பெங்களூரைச் சேர்ந்த மெஹபூப் பாஷா மற்றும் கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் இளைஞர்களை நியமித்து, அதிக அளவில் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வாங்கினர். மேலும் மேம்பட்ட வெடிபொருள் சாதனங்களை தயாரிக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் இந்தியாவில் தனது தளத்தை நிலைநாட்ட முயன்றதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் டெல்லி சதி வழக்கு தொடர்பாக 15 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

Views: - 28

0

0