விரைவில் டும் டும் டும்! போலீசார் உதவியை நாடிய 2 அடி ஆம்பளக்கு அடித்தது லக்

3 April 2021, 9:45 am
Quick Share

திருமணம் செய்ய எனக்கு பெண் வேண்டும் என போலீஸ் உதவியை நாடிய 2 அடி உயர அஸீமுக்கு, தற்போது பெண் கிடைத்திருக்கிறது. இரண்டு பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள முன் வந்திருக்கின்றனர். அதில் யாரை திருமணம் செய்து கொள்வது என்பதை அஸீம் தான் முடிவு செய்ய வேண்டும்.

உத்திரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்திலுள்ள கைரானா எனும் ஊரை சேர்ந்தவர் அஸீம் மன்சூரி. 2 அடி உயரம் மட்டுமே உள்ள அஸீம், பள்ளியில் மாணவர்கள் கிண்டல் செய்ததால், தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். பின் சகோதரருடன் இணைந்து அழகு சாதன கடை நடத்தி வருகிறார். மகனுக்கு அஸீமின் தாய் பெண் தேட. 5 ஆண்டுகளாகவும் பெண் கிடைக்கவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.

இதனைதொடர்ந்து, தனக்கு பெண் பார்த்து தரும்படி, லோக்கல் போலீசாரிடம் அஸீம் புகார் தந்தார். தனது உயரத்தை காரணம் காட்டி, பெண்கள் யாரும் தன்னை திருமணம் செய்ய முன்வரவில்லை எனவும் போலீசாரிடம் கூறியிருந்தார். அவரது அவரது கதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள இரு பெண்கள் முன்வந்துள்ளனர்.

அதில் ஒருவர் அஸீமை போல குள்ளமானவர். காஸியாபாத்தை சேர்ந்த பெண்ணாண ரெஹானா அன்சாரி என்ற அவர், அஸீமை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், ‘‘நான் அவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வேன், நான் அவருக்கு வீட்டில் உதவ முடியும்’’ என்று கூறினார்.

சில நாட்களுக்கு முன், டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் அஸீமை திருமணம் செய்து கொள்ள முன்வந்திருக்கிறார். இதுகுறித்து அப்பெண் வீடியோ ஒன்றில் பேசுகையில், ‘‘அஸீம்.. உங்களை ஒரு வீடியோவில் நான் பார்த்தேன். உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நான் டில்லியில் வசிக்கிறேன். தனியாக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது அஸீமின் பார்வைக்கு வந்திருக்கிறது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அஸீம், ‘இது கடவுள் கொடுக்கும் வரமாக நினைக்கிறேன். எனக்கென இந்த உலகில் ஒருவர் இருப்பதை அவர் எனக்கு காட்டியிருக்கிறார். அவர்தான் அப்பெண்ணை என்முன் கொண்டு வருவார்’ என்றார்.

Views: - 0

0

0

Leave a Reply