பட்டப்பகலில் பயங்கரம்.. ஓட்டலுக்கு உணவு வாங்க வந்த பி.டெக் மாணவி கொலை : ஆந்திராவை அலற வைத்த சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 August 2021, 5:26 pm
ஆந்திரா : குண்டூர் அருகே வீட்டுக்கு அருகே உள்ள ஓட்டலுக்கு வந்த பிடெக் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ரம்யா. இன்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் உணவு பொருட்கள் வாங்குவதற்காக ரம்யா வந்திருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் அந்த மாணவியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். அப்போது மாணவியை பைக்கில் ஏறி தன்னுடன் வருமாறு அவன் அழைத்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் ஏற ரம்யா மறுத்த நிலையில் ஆவேசமடைந்த அந்த இளைஞன் ரம்யாவின் கழுத்து, வயிறு ஆகிய பாகங்களில் ஆறு முறை கத்தியால் குத்தி தப்பி சென்றுவிட்டான். அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் பெற்றோர் ரம்யாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ரம்யாவின் செல்போனை கைப்பற்றி கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ரம்யாவை கொலை செய்த இளைஞன் அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ரம்யாவிற்கு அறிமுகமான நபர் அவரை கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
0
0