உயிருக்கு அச்சுறுத்தல்..! பாதுகாப்பு கேட்ட பாபர் மசூதி தீர்ப்பை வழங்கிய முன்னாள் நீதிபதி..! உச்சநீதிமன்றம் மறுப்பு..!

2 November 2020, 2:50 pm
Supreme_Court_UpdateNews360
Quick Share

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னாள் சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ், பாஜக தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உட்பட 32 குற்றவாளிகளையும் பாபர் மசூதி வழக்கிலிருந்து அண்மையில் விடுவித்தார்.

வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி செப்டம்பர் 30’ஆம் தேதி ஓய்வுபெற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் நீதிபதிக்கு பாதுகாப்பு நீட்டிப்பை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் இது அவசியமில்லை என கருதுகின்றது. ஆனால் முன்னாள் நீதிபதி, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்ததாக வாதிட்டார்.

“ஓய்வு பெற்ற நீதிபதி அச்சுறுத்தல் கருத்து பற்றி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தை ஆராய்ந்த பின்னர், பாதுகாப்பை வழங்குவதை பொருத்தமானதாக நாங்கள் கருதவில்லை.” என்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வின் தலைவரான நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. நீதிபதிகள் நவின் சின்ஹா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோரும் இந்த அமர்வில் இருந்தனர்.

Views: - 19

0

0

1 thought on “உயிருக்கு அச்சுறுத்தல்..! பாதுகாப்பு கேட்ட பாபர் மசூதி தீர்ப்பை வழங்கிய முன்னாள் நீதிபதி..! உச்சநீதிமன்றம் மறுப்பு..!

Comments are closed.