ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். பயங்கரவாதி கொலையில் திடீர் திருப்பம் : மேலும் ஒருவன் சிக்கினான்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 1:47 pm
J&k Border - Updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் பிடிபட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உரி பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, இந்த பயங்கரவாதி கடந்த சில தினங்களாகவே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்து வந்ததாகவும், தற்போது அவர் பிடிபட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதிக்குள் நுழைய முயன்ற மேலும் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2 தினங்களாக பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், ஒரு பயங்கரவாதி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் 4 வீரர்கள் இதுவரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார் .

Views: - 125

0

0