காஷ்மீரில் முதல்முறையாக பலிதான் திவாஸ்..! 30 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரி பண்டிட்களுக்கு அஞ்சலி..!

14 September 2020, 5:52 pm
balidan_diwas_updatenews360
Quick Share

காஷ்மீரில் பாஜக தலைவர்களுடன் காஷ்மீர் பண்டிதர்களும் இன்று பலிதான் திவாஸை முன்னிட்டு பயங்கரவாத தாக்குதலின் போது கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிதர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக காஷ்மீரில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

1989’ல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முக்கிய காஷ்மீர் இந்துக்களை (காஷ்மீர் பண்டிதர்கள்) கொல்லத் தொடங்கிய நாளை நினைவுகூரும் விதமாக, உயிர் இழந்த தியாகிகளுக்கு பலிதான் திவாஸ் மரியாதை செலுத்தப்படுகிறது.

செப்டம்பர் 14 இரவு ஸ்ரீநகரில் உள்ள ஹப்பா கடலில் உள்ள அவரது இல்லத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முதல் காஷ்மீர் பண்டிட் டிக்கா லால் டாப்லூவின் மரணத்தைக் குறிக்கும் வகையில் செப்டம்பர் 14’இல் இது நடத்தப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில், 1989’ல் பயங்கரவாதம் தொடங்கியதிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராளிகளால் கொல்லப்பட்ட அந்த தியாகிகள் அனைவருக்கும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து காஷ்மீர் பண்டிதர்களும் பலிதான் திவாஸ் அன்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அஞ்சலி விழாவை அனந்த்நாக்கில் பாஜக பிரிவு, கிரால் குத் ஸ்ரீநகரில் உள்ள ஷீட்டல் நாத் கோவிலில் ஏற்பாடு செய்தது.

1989’ஆம் ஆண்டில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 8 காஷ்மீர் பண்டிட்களைக் கொன்றனர். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் விஜய் ரெய்னா, “உயிரிழந்த அனைத்து தியாகிகளுக்கும் இன்று நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்” என்று கூறினார். காஷ்மீர் பண்டிதர்கள் மீண்டும் காஷ்மீருக்கு திரும்பி வர விரும்புகிறார்கள் என்றும், உலகெங்கிலும் உள்ள அனைத்து காஷ்மீர் பண்டிதர்களையும் காஷ்மீருக்கு திரும்பி வாருங்கள் என கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Views: - 0

0

0