பாஜக எம்எல்ஏ உதவியாளர் கைது..! அரசு ஆய்வுக் கூட்டத்தில் சுட்டுக் கொலை செய்த வழக்கில் போலீஸ் அதிரடி..!

18 October 2020, 12:51 pm
Ballia_Firing_Main_Accused_Arrest_UpdateNews360
Quick Share

இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மூத்த நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் 46 வயதுடைய நபர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக முக்கிய குற்றம் சாட்டப்பட்ட தீரேந்திர பிரதாப் சிங்கை உத்தரபிரதேச சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) கைது செய்துள்ளது.

ஜெய்பிரகாஷ் அல்லது காமா எனும் நபர் அரசுத் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்ய நடந்த ஆய்வுக் கூட்டத்தில், பாஜக எம்எல்ஏ ஒருவரின் நெருங்கிய நபராக அறியப்படும் திரேந்திர பிரதாப் சிங் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் சகோதரர் சந்திரமாவின் புகாரின் பேரில் இது தொடர்பாக 15-20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேர் காவல் துறையால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய குறைந்தது 12 தனிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ 50,000 ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசியதை அடுத்து இந்த சம்பவம் ஒரு பெரிய அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

முன்னதாக நேற்று சுரேந்திர சிங் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ரியோட்டி காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று, இந்த சம்பவத்தில் அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply