மம்தா பானர்ஜி ஒரு பாசிஸ்ட்..! முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் தாக்கு..!

5 May 2021, 3:17 pm
Katju_Mamata_UpdateNews360
Quick Share

மேற்குவங்க சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு திரிணாமுல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அங்கு தொடந்து நடந்து வரும் வன்முறையால் நாடே அதிர்த்த்ச்சியடைந்துள்ள நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, மம்தா பானர்ஜியை பாசிஸ்ட் மற்றும் திமிர் பிடித்தவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மொத்தம் எட்டு கட்டங்களாக நடைபெற்ற மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் கட்சி, கடந்த 2016’இல் பெற்ற தொகுதிகளை விட இரண்டு இடங்களை அதிகம் பெற்று மொத்தம் 213 இடங்களைக் கைப்பற்றியது. 

அதே சமயம் பிரதான எதிர்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மேற்குவங்கத்திலிருந்து முழுமையாக துடைத்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கடந்த முறை 3 தொகுதிகள் மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில், இந்த முறை 77 இடங்கள் எனும் இமாலய வெற்றியை அடைத்துள்ளதோடு, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. 

திரிணாமுல் கட்சி மகத்தான வெற்றி பெற்றிருந்தாலும், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி,  போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார்.

மம்தா பானர்ஜி தோற்றதால் கோபமடைந்த திரிணாமுல் கட்சித் தொண்டர்கள், பாஜவினர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல பாஜக தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, மம்தாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டது பின்வருமாறு :-

“பாஜக பெரும்பாலும் பாசிஸ கட்சி என அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையான பாசிஸ்ட் மம்தா பானர்ஜி தான். அவரால் விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை விமர்சிக்கும் எவரும் சிறையில் தள்ளபப்டுவார்கள்.

உதாரணமாக, ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபத்ரா, மம்தா குறித்த சில கேலிச் சித்திரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட ஒரே காரணத்திற்காக சிறையிலடைக்கப்பட்டார்.

விவசாயி சிலாதித்ய சவுத்ரி, மம்தா தனது தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேள்வி எழுப்பியதாக, அவர் மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதே போல் சில இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என அவர் செல்லும் வழியில் கோஷமிட்டதற்காக சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

2021’ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, மம்தா அதை ஒரு சிறிய சம்பவம் போல் காட்ட முற்பட்டார். நேர்மையான போலீஸ் அதிகாரியான தமயந்தி சென் இது குறித்து விசாரிக்க வற்புறுத்தியதால், அவரை டம்மி பதவிக்கு மம்தா பானர்ஜி தூக்கியடித்தார்.

உண்மை என்னவென்றால், மம்தா பானர்ஜி சர்வாதிகாரித்தனம் மிக்க திமிர் பிடித்தவர். அவரிடம் தலைமைத்துவம் எதுவம் இல்லை. மக்களின் மிகப்பெரிய பிரச்சினைகளான வறுமை, வேலையின்மை, சுகாதார சிக்கல், மோசமான கல்வித்தரம், விவசாயிகளின் ஏழ்மை, ஊழல், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை அவரால் தீர்க்க இயலாது.

ஆனாலும் சமீபத்திய தேர்தல்களில் வங்காளிகள் தொடர்ந்து மம்தாவுக்கே வாக்களித்தனர். இதற்கு காரணம் பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கம் டெல்லியில் உள்ளவர்களால் ஆளப்படும் என்றும், வங்க மொழி பேசாதவர்களால் வங்கம் நிர்வகிக்கப்படும் என்பது தான்.

இப்போது திரிணாமுல் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியின் குண்டர்கள் எந்தவித அச்சமுமின்றி, மாநிலம் முழுவதும் தங்கள் அராஜகத்தை நடத்துவர்.”

இவ்வாறு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

Views: - 304

1

0