அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: நாக்பூர் ஏர்போர்ட்டில் பதற்றம்….பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!

Author: Aarthi Sivakumar
27 November 2021, 4:02 pm
Quick Share

நாக்பூர்: பெங்களூருவில் இருந்து பாட்னா சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாக்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் இருந்து பீகாரின் பாட்னா நகரத்திற்கு 139 பயணிகளுடன் கோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தின் வானில் பறந்து கொண்டிருந்தபோது என்ஜினில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான எச்சரிக்கை விமானிக்கு கிடைத்துள்ளது.

இதனால், பெரும் விபத்தை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ஜினை நிறுத்தை வேண்டிய தேவை ஏற்பட்டது. இதையடுத்து, நாக்பூருக்கு திருப்பி விடப்பட்ட விமானம் அங்குள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து நாக்பூர் விமான நிலைய இயக்குநர் தரப்பில் கூறப்பட்டதாவது, கோ ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஜி8 873 விமானத்தின் ஒரு என்ஜினில் பழுது கண்டறியப்பட்டது. உடனடியாக நாக்பூரில் உள்ள விமான கட்டுப்பாடு மையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.

இதன்படி விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. காலை 11.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Views: - 245

0

0