அசாமின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து..!

14 May 2021, 9:44 pm
sheikh_hasina_updatenews360
Quick Share

அசாமின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட அன்பான உறவைக் கருத்தில் கொண்டு, பங்களாதேஷின் வளர்ச்சிப் பாதையில் இருந்து அசாம் பலனடைய அழைப்பு விடுத்தார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த திங்களன்று அசாமின் 15’வது முதல்வராக பதவியேற்றார்.

“பங்களாதேஷ்-இந்திய உறவுகளின் அரவணைப்பு-ஆழம்-பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு பங்களாதேஷின் வளர்ச்சிப் பாதையில் இருந்து பலன்களைப் பெற இந்திய அசாம் மாநிலத்திற்கு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.” என பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

அந்த ட்வீட்டுக்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா அளித்த பதிலில், பிரதமர் ஹசீனாவின் நல்வாழ்த்துக்களை மிகவும் மதிக்கிறேன் என்று கூறினார்.

“அண்மையில் பங்களாதேஷில் இருந்தபோது இந்தியாவும் பங்களாதேஷும் ஒன்றாக முன்னேறட்டும் என்று கூறிய மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் பார்வையைத் தொடர அசாம் உறுதிபூண்டுள்ளது. நாம் தொடர்ந்து பரஸ்பரம் முன்னேறுவோம்.” என்று சர்மா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி மார்ச் மாதம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்தார். கொரோனா வெடித்ததில் இருந்து தனது முதல் வெளிநாட்டு பயணமாக பங்களாதேஷ் சென்ற மோடி, ஹசினாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இணைப்பு, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 290

0

0