காற்றழுத்தத்தால் ஆந்திராவுக்கு அடித்து வரப்பட்ட வங்கதேச கப்பல் : வங்கக்கடல் விநோதம்!!

Author: Udayachandran
13 October 2020, 4:49 pm
Bangladesh Ship - Updatenews360
Quick Share

ஆந்திரா : வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வங்க கடலில் பங்களாதேஷ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஆந்திராவில் ஒதுங்கியது.

வங்கதேசத நாட்டு நிறுவனமொன்றிற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கரைக்கு ஏற்றி இரவு அடித்து செல்லப்பட்டது. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் பெரிய அளவில் அலைகள் வீசுகின்றன.

இந்த நிலையில் வங்கக் கடலில் சென்று கொண்டிருந்த அந்த கப்பல் அலைகளால் அடித்து வரப்பட்டு விசாகப்பட்டினம் அருகே மணலில் சிக்கி கரை ஒதுங்கியது. தரை தட்டி நிற்கும் அந்த கப்பலை மீட்கும் முயற்சிகள் தற்போது நடைபெறுகின்றன.

Views: - 58

0

0