பெங்களூர் கலவர வழக்கு..! வங்கி லோன் ஏஜெண்ட் கைது..! என்ஐஏ அதிரடி..!
25 September 2020, 2:32 pmதேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று பெங்களூரில் 30 இடங்களில் தேடுதல் நடத்தி பெங்களூர் கலவர வழக்கில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
கலவரம் தொடர்பாக வங்கி லோன் கலெக்ஷன் ஏஜெண்டான சயீத் சதிக் அலி என்பவரை அது கைது செய்தது. என்ஐஏ அறிக்கையின் படி, 44 வயதான அலி கடந்த மாதம் நகரத்தை சூறையாடிய கலவரத்தில் ஒரு முக்கிய சதிகாரர் என கண்டறியப்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உட்பட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 11’ஆம் தேதி இரவு ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினரால் கிருஷ்ணரை இழிவுபடுத்தி வெளியிட்ட பேஸ்புக் பதிவில் பதிலடியாக நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி வெளியிட்ட புகைப்படம் தொடர்பாக கலவரம் வெடித்தது.
முன்னதாக செவ்வாயன்று கலவர வழக்கின் விசாரணையை என்ஐஏ கையில் எடுத்தது. கலவரம் நடந்த இரவு முதல் அலி தலைமறைவாக இருந்ததாக என்ஐஏ தெரிவித்தது.
தேடல்களின் போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் இரும்பு கம்பிகள் கிடைத்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இந்த சோதனைகளில் சில டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் எஸ்.டி.பி.மற்றும் ஐ பி.எஃப்.ஐ தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.