உஷார் மக்களே..! மார்ச் 27 முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை..! ஒன்பது நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை நாள்..!

Author: Sekar
24 March 2021, 3:45 pm
banking_updatenews360
Quick Share

கடந்த வாரத்தில் தான் வங்கி சேவைகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தடைப்பட்டிருந்த நிலையில், வரும் வாரத்திலும் வங்கிகள் தொடர்ச்சியான விடுமுறையை எதிர்கொள்வதால், வங்கி சேவையை பயன்படுத்தும் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக, கடந்த வாரம் வங்கி சேவை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், இந்த வார இறுதியில் தொடங்கி, இடையில் ஒரு சில நாட்கள் தவிர்த்து ஒரு வாரத்திற்கு வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்தும் இதனால் பாதிக்கப்படும் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகிறது.

எந்தெந்த நாட்கள் விடுமுறை?

  • மார்ச் 27 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை 
  • மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை
  • மார்ச் 29 – ஹோலி விடுமுறை 
  • மார்ச் 30 – வேலை நாள் 
  • மார்ச் 31 – நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் வங்கிகள் இயங்கினாலும் வழக்கமான வங்கி சேவைகள் கிடைக்காது.
  • ஏப்ரல் 1 – வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள் என்பதால் வழக்கமான வங்கி சேவைகள் கிடைக்காது
  • ஏப்ரல் 2 – புனித வெள்ளி 
  • ஏப்ரல் 3 – மாதத்தின் முதல் சனிக்கிழமை – வேலை நாள் 
  • ஏப்ரல் 4 – ஞாற்றுக்கிழமை 

எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம் :

தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருவதால், இந்த சமயத்தில் ஏடிஎம்களில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே தேவையான பணத்தை முன்பே எடுத்து வைத்துக் கொள்வதோடு, முடிந்தவரை டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு, பணத்தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் பார்த்துக்கொள்ள முடியும்.

Views: - 229

0

0